தமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.
தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார்.
நீண்ட காலமாக வெளிவராமலிருந்த அவரது களவாடிய பொழுதுகள் படம் கடந்த வருடம் வெளியாகி அந்த இடைவெளியை கொஞ்சம் குறைத்தது.
இப்போது பிரபுதேவா நடிக்க வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்காக அர்ஜுன் எம்.எஸ் எழுதி இயக்கும் ‘யங் மங் சங்’ படத்தில் நடிகராக வருகிறார் தங்கர் பச்சான். ஜாலியான பொழுது போக்குப் படமான இதில் சித்ராலட்சுணன், ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் வில்லனாகிறார்.
இந்த நடிகர் பட்டாளத்தில் தங்கர் பச்சானும் இடம்பெற்றிருப்பதால் அவர் காமெடி நடிகராகவே இடம் பெறுவார் என்று நம்பலாம்.
இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் லட்சுமி மேனனும் கதாநாயகியாவது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து சீனாவில் முக்கியமான சண்டைக் காட்சிக்ளைப் படமாக்கி வருகிறதாம் படக்குழு.
80களில் நடக்கும் கதையாக அமைந்திருக்கும் படத்துக்கு இசையை அம்ரீஷும், ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவும் கவனிக்கிறார்கள்.