July 16, 2026
  • July 16, 2026
Breaking News
May 25, 2025

‘போங்கு’ பட இயக்குனர் தாஜ் இயக்கும் கமர்ஷியல் படம், பூஜையுடன் துவங்கியது!

By 0 266 Views

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை..!

Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. 

உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பதுதான் இந்தக்கதையின் மையம். 

அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் காமெடி கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. 

நாயகனாக தமிழ்வாணன் நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பிரியா நடிக்கிறார். படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். 

விரைவில் சென்னையில் துவங்கி பரபரப்பாக நடக்கப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

 

படத்தின் தொழில் நுட்ப குழு விபரம்-

தமிழ்வாணன்(நாயகன்)

சாய் பிரியா(நாயகி)

எழுத்து, இயக்கம், – தாஜ்

இசை – எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் 

ஒளிப்பதிவு – விஜய் எஸ் குமரன் 

எடிட்டர் – லினு.எம் 

கலை இயக்கம் – தாஜ் (சங்கர்) 

பாடலாசிரியர் – துரை ராஜ் & ராஜா முகமது 

நடனம் – ஆனந்த் குமார் & செல்வி 

ஆடை வடிவமைப்பாளர் – பிரியா புஷ்பநாதன் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் – வி கோட்டி | 

மக்கள் தொடர்பு – சரண் 

ஒப்பனை – வீர சேகர் 

புகைப்படங்கள் – பாலாஜி 

போஸ்டர் டிசைனர் – தீரன் 

லைன் தயாரிப்பாளர் – பிரபு 

தயாரிப்பு மேலாளர் – நாகராஜ் 

புரமோசன்ஸ் – CTC ரியாஸ் 

VFX – சஞ்சய் 

சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் – முகமது