இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியுள்ளது. இந்தப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைத்திருப்பதை இன்று முறையாக அறிவித்தார்கள். இந்தப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நிற்க… இன்னொரு பக்கம் இதே தினத்தில் தமிழில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கும் இதே ‘ஹீரோ’ தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குகிறார் ஆனந்த் அண்ணாமலை. இவர் பல விருதுகளைப் பெற்ற ‘காக்கா முட்டை’ […]
Read More‘கனா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது ‘தயாரிப்பு எண் 2’ படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. படம் பற்றி இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க […]
Read Moreஆச்சு… சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் அந்தப்படத்தின் டைட்டில் ‘மிஸ்டர். லோக்கல்’. ஆனால், அதை இப்படி எழுதாமல் ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் லோக்கல் என்றும் எழுதுகிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் சிறப்பா என்று கேட்டு விடாதீர்கள். இதைவிட சிறப்பு இருக்கிறது. ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இதில் இணைவதும் சிறப்பாக இருக்கலாம். முதல்முறையாக சிவா படத்துக்கு ஹிப் ஹாப் […]
Read Moreநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’, கடும் போட்டிக்கு இடையே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்… தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து… “நடிகன் என்பதுதான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் […]
Read Moreசிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தில் அவரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று டிரைலரைப் பார்த்தால் புரிகிறது. ஆனால், அது வெறும் சிறப்புத் தோற்றமல்ல…” என்று சொல்லும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அது பற்றி விளக்கினார். “இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். […]
Read Moreஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு. ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி..!” என்றார். அவர் மேலும் கூறும்போது, “பெண்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமையுடன் தடைகளை […]
Read Moreஇயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர். ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் ஆதரவால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தங்கி […]
Read More