September 16, 2025
  • September 16, 2025
Breaking News

Tag Archives

இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்

by on December 6, 2018 0

‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய […]

Read More

ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி – கேலரி

by on November 6, 2018 0

இன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…  

Read More

கட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி

by on October 20, 2018 0

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by on May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 […]

Read More

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை

by on May 13, 2018 0

ரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. அத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” […]

Read More