April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • Meenatchi Govindarajan

Tag Archives

2கே லவ் ஸ்டோரி திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக காதலையும், நட்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். குழந்தைப் பருவத்திலிருந்து நட்புடன் பழகி வரும் ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் பருவ வயது வந்தும் அதே நட்புடன் பழகி வருகிறார்கள். ஊர் உலகம், நண்பர்கள் ஏன் ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோரே கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார்கள்.  ஆனால் ஜெகவீரோ […]

Read More

பிரேமலு படம் போல 2K லவ் ஸ்டோரி படமும் வெற்றி பெற்று வசூல் செய்யும் – சுசீந்திரன்

by on January 23, 2025 0

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள […]

Read More

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும்.  இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது. விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை […]

Read More

வீரபாண்டியபுரம் திரைப்பட விமர்சனம்

by on February 19, 2022 0

‘வன்முறை என்பது இருபுறம் கூரான கத்தி, அது குத்தியவரையும் குத்தும்…’ என்பதை இன்னொரு முறை கத்திக் கத்தி அல்ல குத்திக் குத்தி, வெட்டி வெட்டி சொல்லி இருக்கிறார் சுசீந்திரன்.   படத்தில் சொல்லப்படும் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கும் பக்கத்து கிராமமான நெய்க்காரன் பட்டிக்கும் உள்ளூர பகை இருந்து வர, அதன் காரணமாக மாறி மாறி இரு தலைக்கட்டு குடும்பங்களும் வெட்டிக் கொண்டு சாகின்றன.   இந்தப்பக்கம் சரத்தும், அந்தப்பக்கம் ஜெயப்பிரகாஷும் குடும்ப மற்றும் சாதீய உறவுகளுடன் அரிவாள், கத்தி […]

Read More

குடும்ப உறவுகளின் மதிப்பைச் சொல்லும் படம் வேலன் – மீனாட்சி கோவிந்தராஜன்

by on December 28, 2021 0

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி. அவரது நடிப்பில் வரவிருக்கும் […]

Read More