பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இந்த கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி-கமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 20 8 2020 மாலை 6 மணியில் இருந்து 6.05 வரை நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய எந்த […]
Read Moreமக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள். இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, […]
Read Moreஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறாராம். அத்துடன் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறாராம். இந்த சூழ்நி லையில் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை யும் கமல் ஏற்றுக்கொண்டுள்ளாராம். கமல் அரவணைப்பில் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்பட்டும். வீடியோ கீழே…
Read Moreவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை […]
Read Moreஇரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார். அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல். போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ […]
Read Moreகொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]
Read Moreநடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். “இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் […]
Read More