October 4, 2023
  • October 4, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை
March 25, 2020

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

By 0 603 Views

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

“இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்போது என்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை.

கிளாரா( பூனை) மட்டும் தான் என்னுடன் இருக்கிறது …” என்று ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் இந்த செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கமல் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

முன்னதாக, நடிகை சுகாசினி மணிரத்னம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய தனது மகனை கண்ணாடி பொருத்தப்பட்ட அறையில் தனிமைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.