June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிக்பாஸ் 4 மீண்டும் கமல் – தேர்வுப் பட்டியலில் ரம்யா பாண்டியன்
April 21, 2020

பிக்பாஸ் 4 மீண்டும் கமல் – தேர்வுப் பட்டியலில் ரம்யா பாண்டியன்

By 0 410 Views

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை ரம்யா பாண்டியன், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவாங்கி, புகழ், மணிமேகலை உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்பது.

இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.