November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

சங்கத்துடன் மல்லுக்கட்டி வென்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள்

by on September 29, 2018 0

‘கபாலி’. ’24’, ‘காஷ்மோரா’, ‘மெட்ராஸ்’, ‘சண்டக்கோழி-2’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் என அழைக்கப்படும் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்..? தங்களிடம் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு தனி […]

Read More

தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து

by on July 7, 2018 0

சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து பா.ம.க. […]

Read More

ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் வெற்றியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது

by on June 20, 2018 0

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோருடன் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் குற்றசாட்டுக்கு ஆளானதை அடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மற்றொரு சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

by on May 29, 2018 0

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 […]

Read More

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

by on April 30, 2018 0

நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னணி… தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் […]

Read More

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

by on April 28, 2018 0

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து… “இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில் […]

Read More

திமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்

by on April 27, 2018 0

தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து… “கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் […]

Read More
  • 1
  • 2