July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

மீண்டும் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா? – முதல்வர் விளக்கம்

by on June 12, 2020 0

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார். “சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை […]

Read More

கொரோனா நோயாளிகள் மோசமாக கையாளப் படுகின்றனர் – உச்ச நீதி மன்றம்

by on June 12, 2020 0

இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகின்றது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் […]

Read More

கொரோனா பிடியில் சிக்கிய சின்னத்திரை நடிகை குடும்பம்

by on June 2, 2020 0

இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் அவர் மற்றும் கணவர், ஐந்து வயது மகன், மாமியார் மற்றும் சில குடும்பத்தினர் கொரோனா வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வந்தது. இதுபற்றி தற்போது அவர் மௌனம் கலைத்தார்.  அவர் கூறும்போது “தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தினரில் முக்கியமாக இளயவர்களுக்கும், வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். […]

Read More

பிந்து மாதவி பிளாட்டில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்ட சோகம் – வீடியோ

by on June 1, 2020 0

‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ‘கழுகு 2’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து ‘மாயன்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்து வந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தங்கள் ஃபிளாட்டில் எல்லோரும் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் […]

Read More

திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் சூரி

by on May 12, 2020 0

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.   வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த எல்லா காவல் துறையினரிடம் ஆட்டோகிராப பெற்றுக் கொண்டார். “என்ன விஷயம்..?” என்றபோது….   “கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று […]

Read More

நெருக்கடி காலத்திலும் தொடரும் சாதீய தாக்குதல் – பா. இரஞ்சித் வேதனை

by on May 10, 2020 0

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் […]

Read More

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியேட்டர்களை திறப்பதாக இல்லை – திருப்பூர் சுப்பிரமணியம்

by on May 8, 2020 0

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோவில் விரிவாகப் பேசியுள்ளவை…  “வரும் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக நாம் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் கேட்க வேண்டும். அந்தக் ஐந்து கோரிக்கைகளை விளக்கி தமிழக அரசிடம் ஏற்கெனவே நாம் அனைவரும் ஒன்று […]

Read More

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

by on May 7, 2020 0

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா […]

Read More