January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Aishwarya Rajesh

Tag Archives

ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் டியர் பட பணிகள் இறுதிக் கட்டத்தில்…

by on May 6, 2023 0

*ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.* *’இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.* ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய […]

Read More

டிரீம் வாரியர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா வெளியீடு எப்போது தெரியுமா..?

by on April 24, 2023 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு… ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஃபர்ஹானா’ மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது ட்ரீம் […]

Read More

சொப்பன சுந்தரி திரைப்பட விமர்சனம்

by on April 15, 2023 0

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே கரகாட்டக்காரன் கவுண்டமணி – செந்தில் காமெடி நினைவுக்கு வந்து விடும். அதேபோல் இது ஒரு காமெடிப் படம் என்பதும் புரிந்து விடும். ஆனாலும் ஒரு மெசேஜுடன் இந்த காமெடிப் படத்தை சொல்லி இருப்பதால் இந்தப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்க்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். அது என்ன மெசேஜ்..? “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்“ என்ற குறள் சொல்லும் விளக்கமான “பிறருடைய பொருளைத் தன்னுடையதாக்க நினைத்தால் அது குற்றச் செயலாகத்தான் முடியும்…” […]

Read More

லைக்கா தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் தீராக் காதல்

by on March 24, 2023 0

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை […]

Read More

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்

by on March 3, 2023 0

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நடுத்தர சினிமாவையும் ரசிகர்கள் காப்பாற்ற வேண்டும் – இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள் சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ். ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை […]

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by on February 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம். அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது. அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் […]

Read More

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

by on December 28, 2022 0

பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று […]

Read More

டிரைவர் ஜமுனா சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

by on November 2, 2022 0

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக […]

Read More

இரண்டு புருஷன்களுடன் வாழ்க்கை நடத்திய அனுபவம் – சுழல் விழாவில் பார்த்திபன்

by on June 8, 2022 0

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- […]

Read More

டிரைவர் ஜமுனா படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ரிஸ்க்

by on May 5, 2022 0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

Read More