பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S.அகோரத்தின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விஜய் 63’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேரவுள்ளார். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஒரு இடைவெளிக்குப் பின் ஒரு […]
Read Moreஇங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் […]
Read More‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை. ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று […]
Read Moreஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை. இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன. 1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..? அல்லது 2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..? அல்லது 3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..? ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் […]
Read Moreபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும். இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன். அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே… #தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் […]
Read Moreஇன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது. அதற்கு பதிலளித்த தமிழிசை, “யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர். ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் […]
Read Moreஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள். ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள். இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை […]
Read More‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார். (அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே..? கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது..? இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..?) இன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் […]
Read More