May 25, 2019
  • May 25, 2019
Breaking News
  • Home
  • சிம்பு

Tag Archives

சிம்பு தம்பி குறளரசன் மதம் மாறிய வைரல் வீடியோ

by on February 16, 2019 0

டி.ஆரின் இளையமகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இசையமைப்பாளராக இருந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவர் தன் தந்தை டி.ராஜேந்தர் தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதுகுறித்து டி.ராஜேந்தர் “எம் மதமும் சம்மதம்… ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்..!” என்று கூறியுள்ளார். குறளரசன் மதம் மாறிய வீடியோதான் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…

Read More

ஆபாசப் படத்தில் ஓவியா – 90 எம்எல் டிரைலர் சர்ச்சை

by on February 9, 2019 0

சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’ என்ற படம் தயாராகி வருகிறது. ‘பிக் பாஸ்’ என்ற மூன்றாம் தர பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் ரோல் மாடல் (கஷ்டகாலம்..!) […]

Read More

சிம்பு பிறந்தநாள் பார்ட்டி யில் தனுஷ் வீடியோ

by on February 3, 2019 0

நேற்று முன்தினம் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான மகிழ்ச்சியில் இன்று தனது 36வது வயதை எட்டுகிறார் சிம்பு.  அதற்கான பார்ட்டி தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதில் அவரது நண்பர்களான யுவன், ஜெயம் ரவி, மஹத், ஐஸ்வர்ய தத்தா, யாசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தது பெரிய விஷயமில்லை.  ஒரு கட்டத்தில் அவரது போட்டியாளராகக் கருதப்பட்ட தனுஷ் கலந்துகொண்டதுதான் சிறப்பு. அதை சிம்புவின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட இருவரது ரசிகர்களும் அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.  […]

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

by on February 1, 2019 0

அண்டா பாலாபிஷேக பிரச்சினை எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து காலைக்காட்சியில் சின்ன கட்டவுட், பால் பாக்கெட் அபிஷேகம் என்று கையடக்க கோலாகலத்துடன் இன்று சிம்பு நடித்திருக்கும் இந்தப்படம் ரிலீசாகி விட்டது. சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிம்பு நடிக்கும் படம் எப்படியும் அவரது வாழ்க்கையை ஒட்டியே திரைக்கதை எழுதப்படும். இரண்டையும் சேர்த்தால் எதிர்பார்க்கப்பட்ட அதே டெம்ப்ளேட்டில் இந்தப்படம். மிகப்பெரிய செல்வந்தரான நாசரின் 80-வது வயது பிறந்த நாளுக்கு அவரது பேரன் தருவதாக சொல்லியிருக்கும் […]

Read More

அண்டா பால் விவகாரம் – சிம்புவுக்கு பால் முகவர்கள் நன்றி

by on January 28, 2019 0

சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர்.    இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்படதென்று அதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள […]

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்

by on January 28, 2019 0

சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு […]

Read More

உசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ

by on January 22, 2019 0

எண்ணி ஒரு வாரம் கூட ஆகவில்லை…. சிம்புவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டி. அதற்குள் அவர் மண்டைச் சூட்டுக்கு மத்தளம் அடித்து மதம் பிடிக்க வைத்துவிட்டார்கள்.  போனவாரம்தான் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அட்வைஸாக “என் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள்…  அந்தக் காசுக்கு அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்…” என்று சொன்னார் சிம்பு. அகமகிழ்ந்தது சமுதாயம். அவ்வளவுதான்… அதகென்றே காட்துக்கிடந்த ஸ்டார்ஸின் ரசிகர்கள் என்ற கூட்டம் ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன..? ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு […]

Read More