August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரில் சூர்யாதேவி கைது
July 23, 2020

வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரில் சூர்யாதேவி கைது

By 0 1499 Views

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 4வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூர்யா தேவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார்.

ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூர்யா தேவியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்… பார்க்கலாம்..!