October 14, 2025
  • October 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது
July 14, 2020

சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது

By 0 602 Views

ஹாலிவுட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியாகிவிட்டது இதில் கோலிவுட் மட்டும் விதிவிலக்கா என்ன?

வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ’நவரசா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும், அதில் ஒரு எபிசோடை மணிரத்னம் இயக்கவுள்ளார் என்றும் தகவல்.

இந்த வெப்தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குநராக அறிமுகமாக உள்ளனர்.

இந் நிலையில் ஒரு எபிசோடில் சூர்யாவை ஜெயேந்திரா இயக்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே நித்யா மேனன் நடித்த ’180’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.