தமிழகத்தின் அனைத்து நகரங்கள், சென்னையில் 4 ஆயிரம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய திட்டம்
சென்னை, ஆக. 29″ ஆரோக்கிய உணவு வகைகளில் சிறந்த பிராண்டாக திகழும் சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ‘நார்மலைப்’ மற்றும் ‘நார்மஹெல்த்’ என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதை இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆத்தூர் அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட் தற்போது குறிப்பிட்ட ஸ்டோர்கள், தேசிய நவீன வர்த்தக நிலையங்கள், பிராந்திய நவீன வர்த்தக நிலையங்கள், பார்மா மாடர்ன் டிரேட் அவுட்லெட்டுகள் மற்றும் மின்னணு இணையதளங்கள் ஆகியவற்றில் கிடைக்கிறது.
இது குறித்து இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆத்தூர் கூறுகையில், உணவு உட்கொள்வதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் ‘சுப்ரீம் பார்மா சூப்பர் புட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் உணவு அறிவியலில் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் சென்னை மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதோடு, பிற முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர் மற்றும் பாண்டிச்சேரியிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் எங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் சென்னை நகரில் 3 லட்சம் குடும்பங்களையும் மற்ற நகரங்களில் 2 லட்சம் குடும்பங்களையும் சென்றடைவதற்கான மகத்தான திட்டத்தை நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
சென்னை மற்றும் பிற நகரங்களில் ‘சுப்ரீம் சூப்பர் புட் நெய்பர்ஹுட்’ ஸ்டோர்களை திறந்து அங்கு நாங்கள் எங்கள் பிராண்டை அறிமுகப்படுத்தவுள்ளோம், இது எங்கள் பிராண்ட் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். நார்மலைப் மற்றும் நார்மஹெல்த் ஆகிய 2 வகைகளின் கீழ் எங்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மெட்ரோ நகரங்களிலும், சிற நகரங்களிலும் எங்கள் தயாரிப்புகளை கொண்டு செல்ல இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் வர்த்தகத்திலிருந்து வர்த்தக நடவடிக்கைகள் கடந்த ஆண்டு 77 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த தயாரிப்புகள் அறிமுகத்தின் மூலம் விகிதத்தின் அடிப்படையில் இதன் வருவாய் மற்றும் லாபம் கடந்த 5 ஆண்டுகளாக நடப்பு நிதி ஆண்டில் இதன் வருவாய் 90 முதல் 100 கோடி ரூபாயை எட்டும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் நுகர்வோர் வணிகத்தை அதிகரிக்கும் விதமாக காரணமாக இதன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 30 சதவீதம் அதிகரித்து அதன் இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இதன் என்று ஒருங்கிணைந்த எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் மேல் அதிகரிக்கும் 250 கோடி ரூபாய்க்கு மேல் தொலைநோக்கு வாழ்க்கைக்கு இதன் தயாரிப்புகள் உள்ளன. சுப்ரீம் சூப்பர் புட்ஸ், புதுமை, அனுபவம் மற்றும் இந்நிறுவனத்தின் சூப்பர் புட்களுக்கு மாற்று எதுவும் இருக்க முடியாது என்னும் வகையில் ஆகியவற்றை இணைத்து ஆரோக்கியமான வழிவகுக்கிறது. மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய ஆரோக்கியமான உணவுகள் தயாரிப்புகள் அனைத்தும் நமது உணவை மேம்படுத்துவதோடு நமது முழு திறனையும் உணர உதவுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானதாகும். அதை ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களால் மட்டுமே பெற முடியும். இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 100க்கும் மேற்பட் புதிய உணவு வகைகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இந்நிறுவனத்தில் 15 பேர் பணியாற்றி வருகின்றனர். டெல்லியிலும் இதன் தயாரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளதோடு, வரும் 2023-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 12 ஆயிரத்திறகும் மேற்பட்ட ஸ்டோர்களில் இதன் தயாரிப்புகளை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுப்ரீம் சூப்பர் ஃபுட்ஸ் குறித்து :
சுப்ரீம் சூப்பர் ஃபுட்ஸ் என்பது, சுப்ரீம் ஃபார்மாசூட்டிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் – ன் புதிய கன்ஸ்யூமர் டிவிஷனாக வாழ்க்கைமுறை உணவு விருப்பத்தேர்வுகளுக்கு எளிய, ஆனால் பயனுள்ள ஆலோசனைக் குறிப்புகளை வழங்குவதன் மூலம் சுப்ரீம் நுகர்வோர்களுக்கு நல்ல வழிகாட்டும் வெளிச்சத்தை வழங்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை நுகர்வோர்கள் கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு ஆற்றலையும், அதிகாரத்தையும் வழங்குகின்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும். தயாரிப்புகளுக்கான மூல உட்பொருட்களையும், இயற்கை / மூலிகை விளைபொருட்களின் சாரங்களையும் உற்பத்தி செய்வதில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான செழுமையான அனுபவத்தை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. உலகில் 35-க்கும் கூடுதலான நாடுகளுக்கு இதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்தியாவிலுள்ள முக்கிய தயாரிப்பு உணவு மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் சுப்ரீம் – ன் தயாரிப்பு பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நன்மதிப்பைப் பெற்றிருக்கும் இந்த பிராண்டு, தற்போது பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களிலும் மற்றும் மின்-வர்த்தக ரீடெய்ல் தளங்களிலும் செயலிருப்பைக் கொண்டு இயங்கி வருகிறது.
சுப்ரீம் பார்மாசூட்டிகல்ஸ் குறித்து:
சுப்ரீம் பார்மாசூட்டிகல்ஸ், தனத தயாரிப்பு செயல்பாட்டில் நிபுணத்துவத்தை தொடர்ந்து புத்தாகக்கம் செய்து வந்திருக்கின்ற 30 ஆண்டுகால வரலாறு கொண்ட நிறுவனமாகும். நிலைப்படுத்தப்பட்ட வைட்டமின்கள், மூலிகை சாரங்கள் மற்றும் பார்முலாக்கள், உணவு துணைப்பொருட்கள் மற்றும் API-கள் ஆகியவற்றின் மீது இந்நிறுவனம் கூர்நோக்கம் செலுத்தி வருகிறது. உலகளவில் கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் தனது தயாரிப்பு பொருட்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வது சுப்ரீம் பார்மாசூட்டிகல்ஸ் – ன் செயல்திட்டமாகும்; இதன்மூலம் இன்றைய தலைமுறை மட்டுமின்றி, இனிவரவிருக்கும் தலைமுறையினருக்கும் சிறப்பான ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரத்திற்கான பங்களிப்பை வழங்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும். பாரம்பரியம்மிக்க நகரமான மைசூரில் திரு. கர்நாடகாவின் S.N. ராவ் என்ற தொலைநோக்கு சிந்தனையாளரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. நன்னெறி, தரம், புத்தாக்கம் மற்றும் நேர்மை ஆகியவை இந்நிறுவனத்தின் மைய மதிப்பீடுகளாக இருந்து வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக 20%-க்கும் அதிக CAGR என்ற அளவில் வளர்ந்து வரும் இந்நிறுவனம், ஆரோக்கியமான லாபத்துடன் கடந்த நிதியாண்டில் ரூ.77 கோடிகள் என்ற விற்றுமுதலை எட்டியிருந்தது. புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற நுகர்வோர் பிரிவான சுப்ரீம் சூப்பர் ஃபுட்ஸ் என்பதில், அடுத்த 5-7 ஆண்டுகள் காலஅளவின்போது ரூ.25 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய இந்நிறுவனம் உறுதிபூண்டிருக்கிறது. சுப்ரீம் சூப்பர்ஃபுட்ஸ் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், நடப்பு நிதியாண்டில் ரூ.90-100 கோடி என்ற ஒருங்கிணைந்த விற்றுமுதலை எட்டும் திட்டத்துடன் அடுத்த 5ஆண்டுகள் காலஅளவில் 30% -க்கும் அதிகமான CAGR அளவில் தனது வளர்ச்சி இருக்கும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.