‘மெகுனு’ புயலில் சிக்கி இந்தியர்கள் மூவர் உள்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது.
மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக இந்திய அரசுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களை மீட்க இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு புயல் பாதிப்பினால் சிக்கித்தவித்த 38 இந்தியர்களை இன்று இந்திய கப்பல் சுனைனா பத்திரமாக மீட்டது. உணவு, தண்ணீர், மருத்துவ வசதி இன்றி இருந்த அவர்களுக்கு அனைத்து உதவிகளும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேச தொலைபேசியும் கப்பற்படையினரால் வழங்கப்பட்டது.
சிறப்பான சேவை சுனைனா..!