October 18, 2026
  • October 18, 2026
Breaking News
March 1, 2020

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

By 0 856 Views

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாளை மறுநாள் (மார்ச் 3 ) சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் சங்கர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில், தற்போது கமல் ஹாசனுக்கும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.