July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
November 14, 2019

காணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

By 0 1739 Views

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ‘சுசி லீக்ஸ்’ செய்திகள் மூலம் பரபரப்படைந்தவர் பாடகி சுசித்ரா. நட்சத்திரங்களின் பாலியல் அந்தரங்கங்களை வெளியிட்டு சினிமாவுலகுக்குள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார் சுசி.

அதனைத்தொடர்ந்து அவரது சமூக வலைதல அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் தன் தாய்வீட்டிலிருந்து வெளியேறி சகோதரி சுனிதா வீட்டில் வசித்துவரும் சுசித்ராவை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என்றும் இது தொடர்பாக சுனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசித்ராவைத் தேடி வந்த போலீஸார் அவரை நட்சத்திர விடுதியிலிருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை தற்போது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகத் தகவல். இந்நிலையில் ஒரு ஊடகத்துடன் பேசிய சுசித்ரா “நான் காணாமல் போகவில்லை…” என்றார். “சில மணிநேரங்கள் தொடர்பு எல்லைக்குள் இல்லாததால் தன்னைக் காணாததாக சகோதரி போலீஸில் புகார் கொடுத்ததாகவும், தற்போது மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன் தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற விடாமல் காவல் கப்பதாகவும், இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மர்மமே… உனக்கு இன்னொரு பெயர்தான் சுசித்ராவா..?