August 30, 2025
  • August 30, 2025
Breaking News
November 14, 2019

ஆசிரியையை நாற்காலியால் தாக்கும் மாணவர்கள் அதிர்ச்சி வீடியோ

By 0 875 Views

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் பிரம்பெடுத்தது அந்தக் காலம். இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் கை வைக்கவே கூடாது… இன்னும் கேட்டால் அவர்களைத் திட்டக் கூட கூடாது என்று பள்ளி மேலிடம் அறிவுறுத்துகிறது.

இதனால், ஆசிரியர்கள் மீது மாணவ, மாணவிகளுக்கு இருந்த பயம் சுத்தமாகப் போய்விட்டது எனலாம். சில வருடங்களுக்கு முன் பள்ளியில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலையே செய்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் குழந்தைகள் தினம் கொண்டாடும் இன்று உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வொன்றின் வீடியோ வெளிவந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இங்கு ‘மம்தா துபே’ என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (12-11-2019) பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்த மாணவர்கள் அவரது கைப்பையைத் தூக்கி எறிந்தனர்.

ஆசிரியை அதை எடுத்துக்கொண்டு மீண்டும் அவரது இருக்கையில் அமர முற்பட, மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை ‘மம்தா துபே’வை முற்றுகையிட்டனர்.

அதில் ஒரு மாணவன் நாற்காலியை தூக்கி ஆசிரியையை மாறி மாறி அடித்தார். மாணவர்களின் பிடியில் இருந்து மம்தாதுபே தப்பி வெளியே ஓடினார்.

மாணவர்களால் ஆசிரியை தாக்கப்பட்டது வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள்தான் இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளரிடம் கேட்ட போது, “ஆசிரியை ‘மம்தா துபே’ மாணவர்களை ‘அனாதைகள்’ என திட்டி உள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களை திட்டிக் கொண்டேதான் இருப்பார்..1” என்றிருக்கிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த மம்தா துபே, “காந்தி சேவா நிகேதன் மேலாளருக்கும், எனக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அவர்தான் என்னைத் தாக்குமாறு மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளார்..!” என்று கூறியிருக்கிறார்.

சொந்தப் பகைக்காக மாணவர்களை குண்டர்கள் ஆக்குவதா..? விசாரணை முடிவு என்ன சொல்கிறது பார்ப்போம்…

அந்த அதிர்ச்சி வீடியோ கீழே…