
sri reddy compalins on tamannah shoot
இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது.
அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து வந்தார். இனியும் விட்டால் சினிமாவில் தன்னை நிரத்தரப் பேயாக ஆக்கிவிடுவார்கள் என்று பயந்து அவரை நோக்கி வந்த வெப் சிரீஸை கபாலென்று பிடித்துக் கொண்டார்.
அப்படி அவர் நடித்து வரும் வெப் சிரீஸ் ‘தி நவம்பர் ஸ்டோரி’. ராம் சுப்ரமணியன் இயக்கும் இந்த சீரீஸின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதற்கும், ஸ்ரீ ரெட்டி வெகுண்டெழுவதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..? அங்கேதான் விதியின் விளையாட்டு ஆரம்பம்.
இந்த படப்பிடிப்பு சென்னையில் ஸ்ரீ ரெட்டி வசிக்கும் வீட்டின் அடுத்த வீட்டில் நடந்து வருகிறதாம். அதனால், ஸ்ரீ ரெட்டியின் அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறதாம். பொறுத்துப் பொறுத்து பார்த்த ஸ்ரீ ரெட்டி தன் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் பொங்கியிருக்கிறார்.
“சீக்கிரமே ஷுட்டிங்கில் சென்று என் ஆற்றாமையைக் காட்டப்போகிறேன்…” என்றிருக்கிறாராம்.
ஷூட்டிங்தான் பிரச்சினையா, இல்லை ஷூட்டில் தமன்ஸ் இருப்பது ஸ்ரீ ரெட்டிக்கு பிரச்சினையா தெரியவில்லை. எப்படியோ இவர் உள்ளே புகுந்தால் வெப் சிரீஸுக்கு செலவில்லாத பப்ளிசிட்டி..!