September 13, 2026
  • September 13, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூரரைப் போற்று அக் 30ம் தேதி அமேசான் பிரைமில் – சூர்யாவின் 5 கோடி பகிர்ந்தளிப்பு
August 22, 2020

சூரரைப் போற்று அக் 30ம் தேதி அமேசான் பிரைமில் – சூர்யாவின் 5 கோடி பகிர்ந்தளிப்பு

By 0 769 Views

அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. 

சுதா கொங்கரா (இறுதி சுற்று) இயக்கத்தில், சூர்யாவே தயாரித்து மோகன் பாபு மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கனை நிறுவிய ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சூரரை போற்று எடுக்கப்பட்டுள்ளது. 

“இயக்குனர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன்”, என்கிறார் சூர்யா.

அவர் மேலும், “ கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது!

நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து “சூரரை போற்று”- ஐப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன். ” என்கிறார்.

அத்துடன் இதில் வரும் லாபத்தில்் இருந்து 5 கோடி ரூபாயை பொதுமக்கள் திரையுலகினர் மற்று மற்றும் கொரானா பாதுகாப்பில் பணி புரிபவர்கள் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாகவும்் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே…

Suriya statement

Suriya statement