January 23, 2026
  • January 23, 2026
Breaking News
May 8, 2019

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்

By 0 986 Views

‘மிஸ்டர் லோக்கல்’ அடுத்தவாரம் வெளியாகவிருக்க, ரவிகுமார் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ,படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 (SK16) பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’ , ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்டஇடைவெளிக்கு பிறகு இந்தப் படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக  இணைகிறார்கள். 

இதில் சிவா ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடமேற்கிறார். இமான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இவர்களுடன் யோகிபாபு, சூரி, நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ்,பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஒளிப்பதிவவை நீரவ்ஷா ஏற்கிறார்.

இந்த விவரங்களைத் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இன்று படத்தைத் துவங்கியது. இனி அடுத்தடுத்து படப்பிடிப்பு நிகழ்வுகளும் வரிசையாக அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.

SK16 Inauguration

SK16 Inauguration