காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக வடிவேலு பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.
இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தன்னுடன் அது இது எது, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார்.
இதை பற்றி சிவகார்த்திகேயன் “எனக்கு வடிவேலு பாலாஜியை “அது இது எது” நிகழ்ச்சி முதலே தெரியும், நானும் அவரும் காமெடி ஒன்றாக சேர்த்து செய்வதில் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என ரசிகர்கள் பலரும் கூறியிருக்கின்றனர். நாங்கள் சேர்ந்திருந்தத போதெல்லாம், அது கேளிக்கையாகவே இருக்கும்.
உண்மையில் எங்கள் இயக்குனர் எங்களுக்கு ஒரு அடிப்படை வடிவமைப்பை தான் கொடுப்பார் அதில் நாங்கள் எங்கள் சொந்த ஸ்கிரிப்டை உருவாக்கக் கொள்வோம். ஒரே நாளில் நான்கு எபிசோடுகளுக்கு படமாக்கிய நேரங்களும் உண்டு, அந்த நேரங்களில் அவருக்கு கடைசிவரை அதே உற்சாகம் இருக்கும்.
நடிகர் வடிவேலுவை அவர் பின்பற்றுவதாக அறியப்பட்டாலும் அவருக்கென தன்னிச்சையான தன்மை மற்றும் நம்பிக்கை நடிப்பில் இருந்தது.
நீங்கள் அவரை எந்த மேடையில் கொண்டு நிறுத்தினாலும் அவர் தனது நகைச்சுவையால் கூட்டத்தை உடனடியாக சிரிக்க வைப்பார். சில காலத்திற்கு முன்பு ஒரு திருமணத்தில் அவரை சந்தித்தேன். அவரது சிரிப்பை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்” என்று கூறி தன் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “கோல மாவு கோகிலா” திரைப்படத்தில் நடித்த வடிவேலு பாலாஜி “சிவகார்த்திகேயன் மன்ற தலைவர்” எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் பலரும் அறித்த விஷயம்தான். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படமும் அதுதான்.
தனது நட்பினை வெறும் வாய் வார்த்தையால் மட்டும் கூறி நிறுத்திவிடாமல். மறந்த வடிவேலு பாலாஜியின் குழந்தைகளுக்குக்கான படிப்புச் செலவை தானே ஏற்பதாக கூறி தனுக்கும் வடிவேலு பாலாஜியிக்கும் உள்ள நட்பினை நிரூபித்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மறைந்த வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.