August 4, 2026
  • August 4, 2026

Simple

உலக மக்கள் சேர்ந்து படித்த ஒரே பாடம் கொரோனாதான் – காமெடி சூரி சீரியஸ் பேச்சு

by on June 8, 2020 0

நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். “வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் […]

Read More

நடிகை மேக்னா ராஜின் கணவர் திடீர் மரணம்

by on June 7, 2020 0

நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா திடீரென்று மரணமடைந்து விட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தாவர் மேக்னா ராஜ். தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். நீண்ட நாட்களாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து வந்தார். 2018-ம் ஆண்டு மே […]

Read More

சிம்புவுக்கு பெண் பார்க்கிறோம் வதந்திகளை நம்பாதீங்க – மிஸஸ் & மிஸ்டர் டி ஆர்

by on June 7, 2020 0

உஷா ராஜேந்தர் மற்றும் டி ராஜேந்தர் இருவரும் தங்கள் மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்து ஒரு அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அதன் பிரதி கீழே…. அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் […]

Read More

சிவகுமார் மீது வழக்குப் பதிவு – திட்டமிட்டு தாக்கப் படுகிறதா சூர்யா குடும்பம்?

by on June 6, 2020 0

பொது ஊரடங்கு வந்தாலும் வந்தது எதை பிரச்சனைக்கு உள்ளாகலாம் என்று அலைபவர்களுக்கு தோதான நேரம் கிடைத்திருக்கிறது. யாரோ எப்போதோ பேசிய பேச்சுக்களை எல்லாம் தோண்டி எடுத்து அதன் மீதான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தொடர்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள் அதில் சூர்யாவின் குடும்பம் ஒன்று. ஒரு படத்தில் விழாவில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் பற்றி பேசிய பேச்சை தூசு தட்டி எடுத்து பெரிதுபடுத்தி பிரச்சனைக்கு உள்ளாக்கினார்கள். விஷயம் தெரிந்தோர் அப்படி […]

Read More

பாதுகாப்புடன் கௌதம் மேனன் நடத்திய படப்பிடிப்பு ஒரு சான்ஸ் குடு வீடியோ

by on June 6, 2020 0

பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை வாய்ந்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் வந்திருக்கிறார். […]

Read More