March 25, 2025
  • March 25, 2025
Breaking News
July 20, 2020

அர்ஜுன் குடும்பத்தை தொடரும் கொரோனா சோகம்

By 0 1806 Views

நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அந்த சோகத்தில் இருந்து அவர்கள் முடிவதற்குள் சிரஞ்சீவியின் சகோதரரான துருவா சார்ஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் இன்று அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்த தகவலை ஐஸ்வர்யா அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தன்னுடன் கடந்த நாட்களில் பழகியவர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் உரிய மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அர்ஜுனின் குடும்பத்துக்கு தொடர்ந்து சோதனை காலமாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது இதிலிருந்து அவர்கள் மீண்டு வந்து விடுவார்கள் என்று நம்பலாம்.