ஷான் சி தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரது தந்தையான வென்வு என்பவரின் சாகசங்களில் இருந்து தொடங்குகிறது கதை.
டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல வருடங்கள் யுத்தம் செய்கிறார் வென்வு.
அதன் ஒரு கட்டமாக அற்புத சக்திகள் மற்றும் வினோத விலங்குகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அங்கே செல்லும் அவருக்கு அந்த கிராமத்துப் பெண்ணுடன் காதல் முகிழ்த்து அதன் விளைவாக ஷான் சி மற்றும் ஷியா லிங் பிறக்கிறார்கள்.
திருமண வாழ்க்கை வென்வுவை அமைதியாக ஆக்கினாலும் பருத்தி வீரன் கதை போல் அவர் முன்பு செய்த பாவம் இப்போது அவர் மனைவியை பலி வாங்க மீண்டும் மூர்க்கம் கொள்ளும் அவர் மகன், மகளையும் சண்டைக் கோ வளர்க்கிறார்.
ஆனால், அப்பாவின் குணம் பிடிக்காத இருவரும் வெளியேறி தங்களுக்கு பிடித்த வகையில் வாழ அவர்களையும் யாரோ துரத்துகிறார்கள். அது யார் என்பது சஸ்பென்ஸ்.
வருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து நிற்கிறார்கள். யுத்தத்தில் வெற்றி யார் பக்கம் சாய்ந்தது, இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன? தன் வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, அதிரடி சண்டைக் காட்சிகள் எனக் கலந்து பதில் சொல்கிறது இந்தப் படம்.
ஷாங்க் சியாக சிமு லியூ. காமெடி காட்சிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், ஆக்ஷனும், எமோஷனலும் நன்றாகவே வருகிறது. ஷாங்க் சியின் சகோதரியாக ஷியாலிங்காக மெங்கர் ஜாங். ஆனால் , இவர்கள் இருவரையும் மீறி திரையை காமெடியில் நிரப்புவது ஷாங்க் சியின் தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா (Awkwafina) தான். நீங்கள் ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி, தமிழ் டப்பிங்கில் பார்த்தாலும் சரி காமெடி நடிகையும் பாடகியுமான அக்வாஃபினா கலக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மார்வெல் படங்களுக்கான புதிய காமெடி கதாபாத்திரம் இவர்தான். Ant man படங்களில் வரும் மைக்கல் பெனா போல் இனி ஆசிய மார்வெல் படங்களுக்கு இவர். ஷாங்க் சியின் தந்தை வென்வூ என்னும் மேண்டரினாக டோனி லியூங். எமோஷனலோ, மிரட்டலோ இரண்டையும் சரியாகக் கொடுத்திருக்கிறார். (ஸ்பாய்லர் & சர்ப்ரைஸ்) ‘அயர்ன்மேன்’ படங்களில் விசித்திர என்ட்ரி கொடுத்த பென் கிங்க்ஸ்லீக்கு இதிலும் வேற லெவல் கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதேபோல் சில காட்சிகளே வந்தாலும், தன் அதிரடி சண்டை அனுபவங்களினால் மிரட்டியிருக்கிறார் மிச்சல்.
ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மார்வெல் தங்களின் ஒவ்வொரு படங்களுக்கும் போடும் உழைப்பு இதிலும் பிரதிபலிக்கிறது. மார்வெல்லின் ஃபாதேசத்தைப்வான எமோஷனல் காமெடி ஆக்ஷன்தான் இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதைச் சரியான விகிதத்தில் கலந்து மீண்டும் அசத்தியிருக்கிறார்கள். அதுவும் இந்த முறை ஆசியத் தற்காப்புக் கலைகள் படத்துக்கு பெரும்பலமாக வந்து அமைந்திருக்கின்றன. Shaolin Soccer, Crouching Tiger Hidden Dragon படங்களில் நாம் பார்த்த சண்டைக் காட்சிகளைப் போல இதிலும் பல சண்டைக் காட்சிகள். ஜெட்லி, ஜாக்கி சான் நினைவலைகளும் வந்துபோயின.