January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • வாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி
July 3, 2020

வாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி

By 0 868 Views

பிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ மற்றும் ‘ அரண்மனை கிளி ‘ சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சுவாமி.

இவர் தெலுங்கு மொழியிலும் பல சீரியல்களில் நடித்து அங்கும் புகழ்பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு சீரியல் படப்பிடிப்பிற்காக சென்று உள்ளார்.

அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாம்.

இப்படியிருக்க இங்கு தொலைக்காட்சி தொடர்கள் ஜூலை 8 ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.