சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். இது பற்றிய பகீர் விவரம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது
அதனையடுத்து இரண்டு தினங்கள் முன்பு காலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த ரயிலின் சரக்குப் பெட்டியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டிருத சுமார் 20 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது அவற்றில் இறைச்சி இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு கால்நடை மருத்துவர்கள் அந்த இறைச்சியின் தன்மை, எலும்புகளின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சி என்பதை உறுதி செய்தனர்.
அதையடுத்து இந்த நாய் இறைச்சி சென்னையில் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பெறப்பட்ட ஒரு தகவல்தான் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாய் இறைச்சிகள் சென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதி செய்யப்படாத தகவலாக இருக்க வேண்டும் என்று நம்புவோம்.