August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செய்தது – ஆர்டி ராஜா
July 21, 2018

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செய்தது – ஆர்டி ராஜா

By 0 1236 Views

நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.

ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம் சொல்கிறார் ஆர்டி ராஜா…

“தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை. நாங்கள் படத்தைத் தொடங்குவதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.

எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும் கூட இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்தப் படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தென் பகுதி கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம்.

ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்..!”

மதுரை மக்களை நம்பிக்கெட்டவர்கள் யாருமில்லை ராஜா சார்… ஆனாலும் சென்னையிலேயே நடத்தியிருக்கலாம்..!

கீழே வீடியோ அறிவிப்பு…