September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சாஹோ நடிகையின் சினிமா பாணி நிச்சயதார்த்தம் கேலரி
October 8, 2019

சாஹோ நடிகையின் சினிமா பாணி நிச்சயதார்த்தம் கேலரி

By 0 1989 Views

படத்துக்குள் அமெரிக்க, ஆஸ்திரேலிய மாப்பிள்ளைகளை கிளைமாக்ஸில் விரட்டி விட்டு ஏழைக் கதாநாயகனைக் கை பிடிக்கும் நடிகைகள் நிஜத்தில் மணப்பதென்னவோ வெளிநாட்டுத் தொழிலதிபர்களைத்தான். அதுதானே எதார்த்தம்..? இந்த செய்தியும் அப்படிப்பட்டதுதான்.

சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’. இதில் நடித்திருந்த நடிகை ‘எவ்லின் ஷர்மா’. பஞ்சாபி தந்தையையும், ஜெர்மானிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு வனப்புகளையும் ஒருங்கே பெற்று மாடலாக தன் வாழ்வைத் தொடங்கியவர்.

பின்னர் ‘டர்ன் லெஃப்ட்’ என்ற அமெரிக்கப் படத்தில் நடிகையாகி, அதன் பிறகு இந்தியாவுக்கு ‘யு டர்ன்’ எடுத்து பாலிவுட்டில் நடிகையாக நிலைபெற்றவர். இந்தி, பஞ்சாபி, உருது மொழிகளில் 16 படங்கள் நடித்தவர், சமீபத்திய பிரமாண்டப் படமான ‘சாஹோ’ மூலம் தெலுங்கு, தமிழிலும் கால் பதித்தார்.

இப்போது அம்மணிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. ஒரு நடிகையின் திருமணம் வழக்கமாக எப்படி நிச்சயமாகுமோ அப்படியே ஆஸ்திரேலியத் தொழிலதிபருடன் அமைந்திருக்கிறது. ஒரு நண்பரின் பார்ட்டியில் ‘துஷான் பிந்தி’ என்ற ஆஸ்திரேலியத் தொழிலதிபரை எவ்லின் சந்திக்க நேர, கண்டதும் காதல் பிறந்திருக்கிறது. அப்படியே தொடர்ந்த நட்பில் அடுத்த கடடத்துக்கு இருவரும் நகர, சினிமா பாணியிலேயே அதை உறுதி செய்திருக்கிறார் துஷான்.

நவராத்திரி நாள்களில் எவ்லினை ஆஸ்திரேலியா வரவழைத்து புகழ்பெற்ற சிட்னி பாலத்தின் அருகே இருவருக்கும் பிடித்த பாடல்களை லைவ்வாக இசைக்க வைத்து மண்டியிட்டு தன் காதலை துஷான் சொல்ல, திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம் எவ்லின்.

கீழே நிச்சயதார்த்த கேலரி…

(1)

Image 1 of 7