ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.
இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,
“இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.
இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன்ஜி என்னை சந்தித்தார். நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார்.
இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார்.
நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம்..!” என்றார்.
நடிகை தர்ஷா குப்தா –
“தர்ஷா குப்தா என்றால் ‘குக் வித் கோமாளி’, ‘விஜய் டிவி’ என்ற அளவில்தான் அனைவருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன் ஆனால் என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்படத்தில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பது. அதிலும் ஒப்பனையே இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அந்தக் கனவை இயக்குனர் மோகன்ஜி ருத்ர தாண்டவம் படத்தில் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்..!”‘
படத்தின் இயக்குனர் மோகன்ஜி –
“திரௌபதி படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான 7ஜி சிவா அவர்களுக்கு முதல் பிரதி அடிப்படையில் இந்த திரைப்படத்தை என்னுடைய சொந்த நிறுவனமான ஜி எம் கார்ப்பரேஷன் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறேன்.
திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது.
முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள்.
ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர்தான் அளித்தார். அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார்,
கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.
சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார்.
விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது. அந்த முன்னோட்ட காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும்.
திரௌபதி 360 திரை அரங்குகளில் வெளியானது. ருத்ர தாண்டவம் அக்டோபர் 1ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என வினியோகஸ்தர் 7 ஜி சிவா வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது நடைபெறும் என நினைக்கிறேன். அது நடைபெறறால் இப்படத்தின் வெற்றி உறுதியாகிவிடும்.