July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்
January 23, 2020

மைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்

By 0 847 Views

வெளிநாட்டில் படமெடுத்தால் பார்க்கும் நமக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், படமெடுத்துவிட்டு வருவதற்குள் குழுவினர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது.

அப்படி ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸுக்காக இயக்கி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அசர்பைஜானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார். அங்கே சென்று சேர்வதற்குள் வழியில் துபாயில் கடும் மழையில் அதர்வா சிக்கிக் கொண்டது தனிக்கதை.

அசர்பைஜானிலோ கடும் குளிர். மைனஸ் ஆறு டிகிரியாம். அத்துடன் மழையும் சேர்ந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தால் பிரேக் கூட விடாமல் இடைவிடாத படப்பிடிப்பை நடத்தி முடித்துத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

வழக்கமாக பாடல் காட்சிகளுக்குதான் இப்படி வெளிநாடுகள் போவார்கள். ஆனால், கண்ணன் போனது கதைக்காகவும்தான். கதையில் அப்படி ஒரு தேவை வர, அதற்காக இந்த அசாத்திய முயற்சியை எடுத்திருக்கிறார்.

அங்கே அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அமிதாஷ் பிரதானும் கலந்து கொண்டு நடித்திருக்கிறார். விரைவில் படத்தின் முதல்பார்வை வெளியிடப்படுமென்று அறிவித்திருக்கிறார் ஆர்.கண்ணன்.

முதல்ல தலைப்பைச் சொல்லுங்க சார்..!

R.Kannan's Azarbaijan Shoot

R.Kannan’s Azarbaijan Shoot