April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அதர்வா அனுபமாவுடன் ரஷ்யா செல்லத் தயாராகும் ஆர் கண்ணன்
August 19, 2019

அதர்வா அனுபமாவுடன் ரஷ்யா செல்லத் தயாராகும் ஆர் கண்ணன்

By 0 635 Views

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ போன்ற படங்களில் வலுவான காதலுடன் இயல்பான காமெடியைக் கலந்து கொடுத்து அவற்றை வெற்றிப்படங்களாக்கிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு அந்த வகையில் ‘ரொமாண்டிக் காமெடி’ புதிதல்ல.

ஆனாலும், புதிய காதல் களத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் என்ற புதிய ஜோடியைச் சேர்த்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அவர் இன்னும் பெயரிடாத படத்தில். செப்டம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கிய இந்தப்படக்குழு முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கிறது,

இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகள் படமாக்கி முடிந்து விட்டதாம். மேலும் ஆர்.கண்ணன் பேசியதிலிருந்து…

“முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள் நடத்தி கிட்டத்தட்ட பாதிப் படத்தை முடித்து விட்டோம். சென்னைப் புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தினோம்.

மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறோம். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார்.

R Kannan Directs Atharva, Naren

R Kannan Directs Atharva, Naren

காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடத்திய படப்படிப்புதான் சவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம்.

அதர்வாவை ‘இயக்குநர்களின் ஹீரோ’ என்பேன். கடந்த என் ‘பூமராங்’ படத்தை ஒப்பிட்டாலே தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்திக் கொண்டு வருவதை கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

நான் அவருக்காக எழுதிய பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந்திருப்பதை படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது நான் உணர்ந்தேன்.

அதேபோல அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். அவரது பாத்திரம் கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது.

அனுபமாவின் அப்பா வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவையாகவும், உண்ர்வுபூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் அஜர்பைஜானில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும்..!”

96 படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

R Kannan Finishes Second Schedule

R Kannan Finishes Second Schedule