April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இரண்டாம் திருமணத்துக்கு தயாரான தொகுப்பாளினி ரம்யா
December 30, 2019

இரண்டாம் திருமணத்துக்கு தயாரான தொகுப்பாளினி ரம்யா

By 0 929 Views

சின்னத்திரை, மீடியா மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் ரம்யா சுப்ரமணியனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது ஆடை, சங்கத்தமிழன் படங்களில் நடித்ததை அடுத்து இப்போது விஜய் 64 படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் வட்டத்திலும் பிரபலமடைந்து விட்டார்.

அத்துடன் முக்கியமான மீடியா சந்திப்புகளுக்கு அவரே தொகுப்பாளினியாகவும் மீடியாக்கள் தொடர்பான கேள்விகளின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு பதில்பெறும் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது.

அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார் ரம்யா. அதில் விஜய் 64 படத்தில் நடிப்பது பற்றிய கேள்விக்கு “ஷூட்டிங்க் நடந்து கொண்டிருப்பதால் இப்போது அதற்கு பதிலளிக்க வாய்ப்பில்லை…” என்று கூறிவிட்டார்.

இருந்தாலும் கடந்த 2014-ல் அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து ஒரே வருடத்தில் பிரிந்துவிட்ட அவர் தன் இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு இயல்பாகவே பதிலளித்து அதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். 

அது தொடர்பாக “கருப்பாக இருப்பவரை மணப்பீர்களா..?’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு “கருப்பா, சிவப்பா என்ற நிறம் முக்கியமல்ல… நல்ல குணம்தான் முக்கியம். நல்ல மனிதராக இருந்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன்..!’ என்று கூறியிருக்கிறார்.

நல்ல விஷயம்தான்..!