நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.
இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.
உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.
“ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.
அரைமணிநேரம் பொறுமையாகவும், ஆழமாகவும் கேட்ட ரஜினி படத்தில் இடம்பெறும் நதிநீர் இணைப்பு பாடலையும், டிரைலரையும் பார்த்துவிட்டு “எக்சலண்ட்…” என்றார். பல்லாயிரம் கோடி பாராட்டுகளைப் பெற்ற அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பாராட்டு கிடைத்ததும் அது பல கோடி பாராட்டுகளுக்கு சமம் என்று நெகிழ்ந்தேன்.
நான் கிளம்பும்போது “கண்டிப்பாக பூமராங் படத்தைப் பார்க்கிறேன்..!” என்றார் அவர் அன்புடன். இதுவே எங்கள் டீமுக்குக் கிடைத்த முதல் வெற்றி..!” உற்சாகமாக சொல்லி முடித்தார் கண்ணன்.
‘மசாலா பிக்ஸ்’ சார்பாக இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வா முரளி, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ரதன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.