இன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்…
பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.
150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே.
கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
காவிரியின் அதிகாரம் கர்நாடகா கையில் இருப்பது நல்லதல்ல. கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும்.