இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் பற்றி பரபரப்பான பேட்டி அளித்தார். அதிலிருந்து…
” சிஏஏ சட்டமாக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் சாதகமாக தீர்ப்பு வருமா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை சிஏஏ திரும்ப பெறப்படாது என்று தெரிகிறது.
இதை சொன்னால் பாஜகவின் ஊதுகுரல் என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். சில கட்சிகள் மதரீதியாக மக்களை தூண்டுகின்றனர்.
இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று கைகூப்பி கேட்டு கொள்கிறேன்..!
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். இதன் முழுப் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்தது..! ”
இவ்வாறு பேட்டியளித்த ரஜினிகாந்த் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனை வரவேற்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது கீழே…