உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார்.
அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார்.
பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் பெண் பத்திரிகையாளர் குறித்த கேள்விகளுக்கு, “நிர்மலா தேவி விவகாரத்தில் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். பெண் பத்திரிகையாளர்களை பற்றி இழிவாகக் கருத்துகளைப் பதிவு செய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்..!” என்றார்.
அமெரிக்காவில் ரஜினி 10 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்புவார் என்று தெரிகிறது.