March 21, 2025
  • March 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிதாமகன், கஜேந்திரா பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை – பகீர் வீடியோ
March 6, 2023

பிதாமகன், கஜேந்திரா பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை – பகீர் வீடியோ

By 0 833 Views

பிரபல விநியோகஸ்திரம் தயாரிப்பாளருமான வி. ஏ. துரை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர்.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.

இவர் தயாரிப்பில் விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இடையில் பட தயாரிப்பை நிறுத்தியவர் அதற்குப்பின் வெளியுலகத்துக்கு அதிகமாக தெரியாமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் இப்போது இருக்கும் பரிதாபகரமான வீடியோ ஒன்றை அவரது நண்பர் அனுப்பி இருக்கிறார். அதில் சர்க்கரை நோய் ஏகத்துக்கும் ஏறிப் போய் காலில் புண்கள் வந்து உள்ளே எலும்பு தெரியும் அளவுக்கு கால்களை அரித்துவிட கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறார்.

இந்த வீடியோவை காணும் சினிமா உலக பிரபலங்கள் அவர் நலம் பெற ஆவன செய்வார்கள் என்று நம்பலாம்.

பதற வைக்கும் பகீர் வீடியோ கீழே…