April 15, 2025
  • April 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்
March 1, 2020

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

By 0 694 Views

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா.

அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார்.

அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடி க்க ஜோ நாயகியாக நடித்து வந்தார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, அனைத்து நடிகர்களும் கொண்ட இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.

கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

‘பொன்மகள் வந்தாள்’ படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜோதிகா எப்படி பொன் மகள் வந்தா ளில் தோற்றமளிப்பார் என்பதை நாளை படத்தின் முதல் பார்வைையக வெளியிட இருக்கிறார்கள்.