தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…
“பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மராட்டியம் உள்பட நான்கு மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. டிசம்பர் மாத இறுதியில் தமிழக பா.ஜனதா புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
1969-ம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அதனை வரவேற்றனர். தற்போது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வெளிநாடு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவே வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை விமர்சனம் செய்வது சரியல்ல. அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!”