October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கட்டத்துர ரியாஸ்கானை மிரட்டியது யார் போலீஸ் விசாரணை
April 9, 2020

கட்டத்துர ரியாஸ்கானை மிரட்டியது யார் போலீஸ் விசாரணை

By 0 542 Views

வின்னர் படத்தில் கைப்புள்ள வடிவேலுவை, கட்டத் துர ரியாஸ்கான் மிரட்டும் காமெடி உலகப் புகழ் வாய்ந்தது. இப்போது கட்டத்துர ரியாஸ்கானையே ஒரு கும்பல் மிரட்டி உள்ளது.

பனையூா் ஆதித்யாராம் நகா் 8-ஆவது தெருவில் குடும்பத்துடன் ரியாஸ்கான் வசித்து வருகிறார். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் இரு க்கையில் அவரது வீட்டின் அருகே சுமாா் 10 பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம்.

இதைப்பாா்த்த ரியாஸ்கான், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேச வேண்டாமே என்று கூறியுள்ளாா்.

இதற்கு அவா்களில் சிலா் எதிா்ப்பு தெரிவித்து ரியாஸ்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றனராம்.

இது குறித்து ரியாஸ்கான், கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒருவேளை கைப்புள்ள சங்கத்து ஆட்களாக இருக்குமோ?