பிரதமர் மோடி பயணிக்க ரூ.12 கோடி விலையில் இரண்டு ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன.
அந்தத் தகவல்களில் இருந்து…
ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான்.
எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதமர் கார் மாற்றப்பட வேண்டும். ஆனால் மோடியின் கார்கள் 8 ஆண்டுகளாக மாற்றப்படாததால் தணிக்கையின் ஆட்சேபம் வந்துள்ளது. இது பிரதமரின் உயிரோடு சமரசம் செய்வது போன்றது என்ற கருத்தும் வெளியிடப்பட்டது.
பிரதமருக்கான அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில்தான் பாதுகாப்பான கார் வாங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டு பிரதமரின் கருத்துகளைப் பெறாமல் எஸ்.பி.ஜி. சுதந்திரமாக முடிவு எடுத்துள்ளது.
பிரதமர் கார் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய பரவலான விவாதம், தேசிய நலனில் இல்லை. ஏனென்றால் இது பொது களத்தில் தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கிறது. இது பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மட்டுமே உள்ளது.
எந்த கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி எந்த முன்னுரிமையும் தெரிவிக்கவில்லை.