பாஸிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் எல்.சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்க, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.
2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வில்…
நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது…
நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது.
கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி, இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைபடங்கள் பார்த்து மகிழலாம்..!”
நடிகை ரம்யா நம்பீசன் –
“மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தன. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும்..!”
நடிகை பூர்ணிமா ரவி –
“இது எனது முதல் திரைப்படம். படப்பிடிப்பு அனுபவங்கள் முழுதுமே எனக்கு புதிதாக இருந்தது.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எனது கதாபாத்திரம் குறித்து கூறும்போது, “இது மற்ற படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தங்கை பாத்திரமாக இருக்கும்…” என உறுதியளித்தார். என்னைக் கனிவாக கவனித்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி..!”
நடிகர் பாலசரவணன் –
“நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல்தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொட்டே, தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்தற்கு ரியோ ராஜுக்கு நன்றி.
குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..!”
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் –
“திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது.
இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார்.
பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார்.
100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும், 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..!”
நடிகர் சித்தார்த் விபின் –
“பொது முடக்க காலத்தில் இந்த திரைபடம் ஓடிடியில் வர பேச்சுவார்த்தை நடப்பது போல் இருந்தபோது, மிகவும் பயந்தேன் ஆனால் தயாரிப்பாளர்கள் மிக உறுதியுடன் இருந்து திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதை, கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது..!”
தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் –
“ஆரம்பத்தில் ஏப்ரல் 2019 ல் இப்படத்தை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருந்தோம். எல்லோருக்கும் தெரிந்தது போல் கொரோனா பொதுமுடக்கத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் மிகவும் கடினமான மன அழுத்தம் இருந்தது.
பல தடைகள் கடந்து இப்போது பாஸிட்டிவ் விசயங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளது. திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த காமெடி கொண்டாட்டமாக இத்திரைப்படம் இருக்கும்..!”
நடிகர் MS பாஸ்கர் –
“இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் படப்பிடிப்பில் எனக்கு முழு சுரந்திரத்தை தந்தார். எனது சிறிய பரிந்துரைகளை, நான் சொன்ன சிறு வசனங்களை, எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். பத்திரைக்கை மற்றும் ஊடக நண்பர்கள் எங்கள் கடின உழைப்பிற்கு உங்கள் ஆதரவை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்..!”