August 30, 2025
  • August 30, 2025
Breaking News
July 6, 2020

கொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை

By 0 726 Views
சீனாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின்  இரண்டாவது அலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
 
இந்நிலையில கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம் சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
 
பிளேக் நோய் தாக்கத்தின் எதிரொலியாக, பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
 
மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் கிடத்தியுள்ளது.