January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜூன் 14 ல் வெளியாகிறது உமாபதி நடிக்கும் ‘பித்தல மாத்தி’
June 7, 2024

ஜூன் 14 ல் வெளியாகிறது உமாபதி நடிக்கும் ‘பித்தல மாத்தி’

By 0 388 Views

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.