September 19, 2024
  • September 19, 2024
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 30, 2018

பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – செங்கோட்டையன்

0 1236 Views

இன்று சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான செம்மலை பேச்சுக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதிலிருந்து… “இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த ஆட்சிக்குக் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் பத்து மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்தப் பள்ளகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக […]

Read More
May 30, 2018

எந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது – தூத்துக்குடியில் ரஜினி பேட்டி

0 972 Views

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது… இங்கே நடந்த கலவரத்தில் வன்முறை செய்தது சமூக விரோதிகளின் செயல். அவர்கள்தான் உள்ளே நுழைந்து போராட்டத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது. இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு […]

Read More
May 29, 2018

ஸ்டெர்லைட் மூடியதால் பணி இழந்தோர்க்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் – தமிழிசை

0 1073 Views

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் இருந்து… “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்தபோது மறுபடியும் நீதிமன்றம் சென்று ஆலை திறக்கப்பட்டது போல் மீண்டும் நடைபெறக் கூடாது. தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்தார்கள் என்பது வேதனையான விஷயம். ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் பணியிழந்தவ்ர்களுக்கு அரசு […]

Read More
May 29, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கொலை வழக்காக பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு

0 1266 Views

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும், நாடு தாண்டியும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிரச்சினைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.5 […]

Read More
May 27, 2018

ஐபிஎல் 2018 சென்னை அணி 3 -வது முறை சாம்பியன்

0 1192 Views

11-வது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய […]

Read More
May 27, 2018

காலக்கூத்து விமர்சனம்

0 1478 Views

காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன். சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது. பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். […]

Read More
May 26, 2018

தூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்

0 1043 Views

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது… “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு […]

Read More