September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 11, 2018

பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

0 1127 Views

இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து… கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும். இதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய பொருளாதார […]

Read More
June 10, 2018

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி

0 947 Views

கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்த நிலையில், 2017-18ம் நிதியாண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த இழப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரி நீரவ் மோடிக்கு 14 ஆயிரம் கோடி […]

Read More
June 8, 2018

திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு

0 1092 Views

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். “கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம். திருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க […]

Read More
June 8, 2018

3-வது முனையமானது தாம்பரம் ரயில் நிலையம் – நெல்லைக்கு புதிய ரயில்

0 1117 Views

சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் சென்னையில் இருக்க, மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 49 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று தாம்பரத்தில் மூன்றாவது முனையம் தொடங்கப்பட்டது.   இந்த முனையத்தை மத்திய ரயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு செல்லும் ‘அந்த்யோதயா’  ரயிலையும் அவரே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் முழுவதும் […]

Read More
June 7, 2018

காலா திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

0 1270 Views

31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை. தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த […]

Read More
June 6, 2018

சிம்பு சீறிப் பாயவிருக்கும் அடுத்த சீசன்

0 1082 Views

‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து […]

Read More