July 10, 2025
  • July 10, 2025
Breaking News
June 10, 2018

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி

By 0 1043 Views

கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்த நிலையில், 2017-18ம் நிதியாண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன.

இந்தியாவில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இழப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரி நீரவ் மோடிக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனளித்ததில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டு முதலிடத்திலும் ஐ.டி.பி.ஐ வங்கி ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.

மற்ற பொதுத்துறை வங்கிகளின் நிலை இப்படியிருக்க, 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபமும், விஜயா வங்கி ரூ.727.02 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.